நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்
பொன்மொழி.:
ஓரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். ஓரு முஸ்லிமின் மரியாதைக்கு
குறைவு ஏற்படுத்துவது மிக மிக கெட்ட செயலாகும்.
அல்லாமா ரூமி அவர்களின் விளக்கமொழி.:
காலிலே முள் தைத்து விட்டால் அவன் தன் கால்களை தொடையின்
மீது வைத்துக் கொள்கிறான். முள்ளின் தலைபாகத்தை ஊசி முனையால் தேடுவான். அது
கிடைக்கவில்லையென்றால் அதை உதட்டால் ஈரப்படுத்துவான். காலின் முள்ளை கண்டுபிடிப்பதே
இவ்வளவு சிரமமென்றால் மனதில் தைத்த முள்ளை கண்டுபிடிப்பது எவ்வளவு சிரமம் என்பதை
நீயே சொல்.
தெளிவுரை.: தீயினால் சுட்ட புண்
உள்ளாறும்.ஆறாதே நாவினால் சுட்டவடு.அம்பினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்துண்டு.
நாவினால் உண்டாக்கிய காயத்திற்கு மருந்தே இல்லை.
ஆகவே எந்த மனிதனுடைய மானத்தோடும், மனதோடும், விளையாடக்கூடாது.
No comments:
Post a Comment