Thursday, 3 May 2012

முடியாது என்பதை மூடிவிடு

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொன்மொழி .:
பலகீனமான முஸ்லிமை காட்டிலும் பலமுல்ல முஸ்லிமே மிகச்சிறந்தவன், இறைவனுக்கும் உகப்பானவன். எல்லா வற்றிலும் நலவு இருக்கிறது. எது உனக்கு பிரயோஜனம் தருமோ அதை பெறுவதிலே ஆவலுடன் முயற்சிசெய். இறைவனிடம் உதவி தேடு. முடியவில்லை என்று இருந்துவிடாதே. (இதற்க்குப் பிறகு ) ஏதாவது உனக்கு ஏற்பட்டால் அப்படி செய்து இருக்கலாமே, இப்படி செய்து இருக்கலாமே என்று புலம்பாதே. மாறாக இறைவன் தன் நாட்டத்தின் படி நடத்திவிட்டான் என்று சொல். ஏனெனில் அப்படி ,இப்படி ,என்று புலம்புவது ஷைத்தானுடைய செயலை (உனக்குள்ளே) தோற்றுவித்துவிடும். 

அல்லாமா ரூமியின் விளக்கமொழி:.
இறையருளைப் புரிந்து கொள்ளாமல் தன்னை இயலாதவனாக கருதுகிறவனே உறக்கத்தில் ஆழ்ந்து விடாதே. உறங்க வேண்டுமானால் அந்த கனி கொடுக்கும் மரத்துக்கு கீழே சென்று உறங்கு.


மனிதன் இறைவணக்கம் புரிவதில் மட்டும் தன்னை இயலாதவனாக, நேரமில்லாதவனாக,கட்டாய நிலையில் உள்ளவனாக காட்டிக்கொள்கிறான். உலக இன்பத்தை நுகர, உலக ஆதாயத்தை தேட, தனது அதிகாரத்தையும், ஆற்றலையும் பயன் படுத்துகின்றான். ஆனால் இறைநெருக்கத்தையும்,இறைஞானத்தையும் உணர்ந்து கொண்ட இறையடியார்கள் என்றுமே தங்களை செயலற்றவர்களாகவோ, இயலாதவர்களாகவோ நினைக்கமாட்டார்கள் .: 

No comments:

Post a Comment